The Blasts which rocked Bangalore
லொடுக்கு சற்று விரைவான நடையுடன் கழுகுவின் அறைக்குள் நுழைந்தான்.
தன்னுடைய கணினியை ஆய்ந்து கொண்டிருந்த கழுகு "என்னடா முகத்தில் ஒரு பதற்றம் தென்படுகிறது?" என்று கேட்டது.
லொடுக்கு பதற்றம் மாறாமல், "டேய் பெங்களூரு-வில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வந்தது உண்மையா?" என்றான்.
"ஆம் மொத்தம் ஒன்பது இடங்களில் வெடித்துள்ளன" கழுகுவின் குரலில் கவலை தென்பட்டது.
,
"சரி ஒன்னோட ஆளு கிட்ட பேசிட்டியா? அவ பாதுகாப்பா இருக்காளா?" கழுகு லொடுக்குவின் மனைவியாகப் போகிறவளைப் பற்றி அக்கறையோடு கேட்டது.
"இல்லைடா. அங்கே அத்தனை மொபைல் நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை." லொடுக்குவின் உள்ளத்தில் இருந்த பதற்றம் அவன் கண்ணில் தெரிந்தது.
"சரி கவலையை விடு. அவளுக்கு எதுவும் நேர்ந்திருக்காது. அவள் இருக்கும் HAL பகுதியில் குண்டு எதுவும் வெடித்ததாகத் தகவல் இல்லை.”
"இல்லடா. அவளிடம் பேசி உறுதி செய்த பின்னர் தான் என் உள்ளம் ஆறுதல் அடையும்." ஒரு கணவனுக்கே உரிய கவலையுடன் லொடுக்கு பேசினான்.
"டேய் கவலையை விடுடா. அங்கு வைக்கப்பட்ட அத்தனை குண்டுகளுமே குறைந்த அழிப்புத்தன்மை உடையது (Low Intensity Bomb) என்று காவல்துறை சொல்லியுள்ளது. மொத்தம் 5 பேர் காயமடைந்துள்ளனர். லக்ஷ்மி என்ற பெண் மரணம் என்று தகவல் வந்துள்ளது."
"காவல்துறையும் அரசும் ஆரம்பத்தில் பாதிப்பைக் குறைத்தே சொல்லும் என்பது உனக்குத் தெரியாதா? நம்முடைய தொழிலில் எத்தனை முறை பார்த்திருக்கிறோம்?"
"டேய்! அதையே தான் நானும் சொல்கிறேன். நாம் நிருபர்கள். கொஞ்சம் நினைத்துப் பார். மே 13 அன்று ஜெய்ப்பூரில் நடந்த 8 குண்டுவெடிப்பில் 65 பேர் இறந்தனர், 150 பேர் படுகாயம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்-ல் ஐதராபாத் மெக்கா மசூதியிலும், அக்டோபர்-ல் சார்மினார் அருகிலும் வெடித்த குண்டுகளில் தலா 30 மற்றும் 10 பேர் இறந்தனர். இத்தனைக்கும் இரண்டு இடத்திலும் வெடித்தது 1 அல்லது 2 குண்டுகள் தான். அதை விட மோசமாக மும்பை ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 900 பேர். அதில் இறந்தவர்கள் மட்டும் 200 பேர். மொத்தம் ஏழு குண்டுகள் வெடித்தன.”
"ஆம் எல்லாம் நினைவிருக்கிறது. ஆனால் அவை எல்லாமே ஒரு நிருபர் என்கிற முறையில் ஒரு செய்தியாகத்தான் என் கண்ணில் பட்டன. இப்போது தான் நான் அதை ஒரு அழிவாகப் பார்க்கிறேன்."
"டேய் நான் அதற்காகச் சொல்லவில்லை. தற்பொழுது கிடைத்துள்ள தகவல் படி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வெடி பொருள் ஜெலட்டின் தான் என்பது உறுதியாகி உள்ளது. அதை வைத்து 300மி.மீ பருமன் கொண்ட ஒரு Concrete Slab-ஐக்கூடப் பிளக்க முடியாது.” கழுகு உறுதியான குரலில் சொன்னது.
லொடுக்கு பழைய நிலைக்குத் திரும்பியிருந்தான். "அப்படியென்றால் குண்டு வைத்தவர்களுடைய நோக்கம் Infrastructure Damage அல்ல. இல்லையா?”
"அப்படிச் சொல்ல முடியாது. Infrastructure அளவில் இந்த நிகழ்வு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்."
"என்னடா கமல் மாதிரி குழப்பமா பதில் சொல்ற?" லொடுக்குவின் குரலில் பழைய கேலி இருந்தது.
"தெளிவாகவே சொல்கிறேன். குண்டு வெடிப்பின் விளைவால் ஏற்பட்ட பாதிப்பு என்னவோ Infrastructure Damage ஏற்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர்களுடைய நோக்கம் என்ன என்பது நமக்குத் தெரியாது இல்லையா. அதே நேரத்தில் Human Casualty அவர்களுடைய நோக்கமாயிருக்குமோ என்பதிலும் ஐயம் உள்ளது."
“ஏன்" லொடுக்கு கேட்டான்.
“ஏனென்றால் அதிகமாக Human Casualty ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் Moving Target தான் குறி வைப்பார்கள். எடுத்துக்காட்டாக Samjhauta Express குண்டு வெடிப்பு மற்றும் மும்பை ரயில் குண்டு வெடிப்பு, லண்டன் பேருந்து குண்டு வெடிப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மற்ற எல்லா குண்டு வெடிப்புகளையும் விட Moving Target Blast தான் அதிக Human Casualty ஏற்படுத்தும்.”
“இல்லை கழுகு. Human Casualty வைக்கப்படுகிற இடத்தையும் பொறுத்தது இல்லையா? பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை, மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்றவை கூட நிறைய மனித இழப்பை ஏற்படுத்தும் இல்லையா?"
"ஆம்! இப்போது தான் நீ ஒரு புலனாய்வு நிருபர் மாதிரி பேசுகிறாய்.
நீ குறிப்பிட்ட இடங்களில் கூட அவர்கள் வைத்து இருக்கிறார்கள். ஆனால் பேருந்து நிலையத்திற்கு பதிலாக பேருந்து நிறுத்தத்தில் குண்டு வைத்திருக்கிறார்கள். அங்கு தான் ஒரே ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.
பொதுவாக நெரிசல் உள்ள பகுதியில் குண்டு வெடித்தால் வெடிப்பில் இறப்பவர்களோடு மட்டுமல்லாமல் வெடித்த பின்னே மக்கள் சிதறி ஓடும் போது ஏற்படும் நெரிசலில் சிக்கி இறப்பதும் நிகழும். Moving Target -ல் வைக்கும் போது வெடிப்போடு சேர்த்து வண்டியும் தீப்பிடிப்பது உறுதி (Fuel Oil இருப்பதால்). எனவே தான் இந்த இரண்டும் Soft Target-ஆகக் கருதப்படுகிறது. குறைந்த முயற்சியில் அதிக இழப்பு."
"அவர்களுடைய நோக்கம் தான் என்ன? Infrastructure Damage, Human Casualty ரெண்டுமே இல்லாவிட்டால் வேறென்ன நோக்கம் இருக்க முடியும். வைத்தவ்ர்கள் யார் என்று தெரிந்து விட்டதா?"
"வைத்தவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால் அரசு விரைவில் அவர்களைப் பிடித்து விடும். சட்டத்திற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்."
"புலனாய்வுத்துறை என்ன சொல்கிறது?" லொடுக்கு கேட்டான்.
"இந்தத் தாக்குதலைப் பற்றி எதுவும் புலனாய்வுத்தகவல் வரவில்லை என்று சொல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவல்படி குண்டு வெடிப்புக்கு முந்திய நாள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டும் இடங்களிலும் குண்டு வெடிப்பு நிகழலாம் என்று தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது."
"யோவ் கழுகு என்னய்யா இது. வானிலை அறிக்கை மாதிரி இங்கே நடக்கலாம் அங்கே நடக்கலாம் என்று சொன்னால் என்னய்யா செய்வது. ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த தேதியில் இந்த நிற Toyota வண்டியில் வெடிகுண்டு வைத்து தாக்குவார்கள் என்று RAW அறிவித்த பின்னாலே கூட தாக்குதலைத் தவிர்க்க முடியவில்லை. இந்த நிலையில் குத்துமதிப்பா வெடிக்கலாம் என்று சொன்னால் எப்படித்தான் தாக்குதலைத் தவிர்ப்பது."
"ISI, SIMI, LeT, HUJI போன்றவர்களின் தொடர்பும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக சில தகவல் தெரிவிக்கின்றன." கழுகு சொன்னது.
"எனக்கு நம்பிக்கை இல்லை கழுகு.”
"எனக்கும் தான். வைக்கப்பட்ட குண்டுகள் அத்தனையும் ஜெலட்டின் குண்டுகள். பெங்களூருவைச் சுற்றியுள்ள கல் குவாரிகளில் இருந்து எளிதாகப் பெறலாம். வெடிக்கப் பயன்படுத்திய Timer கருவி எந்த எலக்ட்ரானிக் கடையிலும் மிக எளிதில் கிடைக்கும். நிறைய சேதம் ஏற்படுத்த அவர்கள் பயன்படுத்திய Nut, Bolt (Projectiles) எல்லாம் தெருவில் கூட கிடைக்கும். மேலே குறிப்பிட்ட தீவிரவாத இயக்கங்கள் பயன்படுத்தும் RDX மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சேதம் மிக மிக அதிகமாயிருந்திருக்கும்."
"இதை வைத்தது எந்த இயக்கமாயிருக்கும் என்று உனக்குத் தோன்றுகிறது?"
"ஏதோ அதிக பொருள் வளம் இல்லாத ஒரு கும்பல் தான் இதை செய்திருக்கிறது. ஆனால் அவர்களிடம் Perfect Coordination மற்றும் Network உள்ளது. இது ஒரு Dry Run ஆகக்கூட இருக்கலாம். நிறைய இழப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இது உலகின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அது மட்டுமே கூட அவர்களது நோக்கமாக இருக்கலாம். இது அவர்களுக்கு ஒரு Moral Booster.
மேலும் சில தாக்குதல்களில் ஈடுபட இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு ஊக்கம் தரலாம். காவல்துறை கூட இது வரை தீவிரவாதிகள் தாக்குதல் என்ற சொல்லை பயன்படுத்தாமல் Miscreants என்று தான் சொல்கிறது. இது போன்ற குழுவினரை ஆரம்பத்திலேயே அழித்து விட வேண்டும், இல்லையென்றால் பின்னால் நம் நாட்டின் அமைதிக்கு இவர்கள் கடுமையான தலைவலியாக இருப்பார்கள்.”
“இரு நான் முதலில் என் வருங்கால மனைவியிடம் பேசிவிட்டு வந்துவிடுகிறேன். எனக்கு இப்போதைக்கு அவளுடைய பாதுகாப்பு தான் முதன்மையான தலைவலி” என்று சொல்லிக்கொண்டே லொடுக்கு செல்பேசியுடன் வெளியேற, கழுகு அவனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே தன்னுடைய கணினியில் மூழ்கிப்போனது.
Saturday, July 26, 2008
Subscribe to:
Posts (Atom)