குட்டிப் பிசாசு – சகரிகா
“சகரிகா என்ற இந்தக் குட்டிப்பெண் தான் அண்மையில் இந்திய அறிவியல் அறிஞர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடுவில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர். இந்திய பாதுகாப்புத் துறையே இந்தப் பெண்ணின் வருகையால் புத்துணர்ச்சி அடைந்துள்ளது எனலாம்” என்று நம்முடைய கழுகு உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தது.
“சரி, இந்தக் குட்டிப் பெண் அப்படி என்ன செய்து விடுவாள்? அப்படி என்ன சிறப்புப் பெற்றவள்?” என்று லொடுக்கு எப்போதும் போல் கு(கி)றுக்குக் கேள்வி கேட்டான்
“இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமான DRDO-வினால் அண்மையில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்ட ஏவுகணை தான் சகரிகா. இது கிட்டத்தட்ட 500 - 700 கி.மீ தொலைவு வரை பாய்ந்து இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்லது.” கழுகு பொறுமையுடன் பதில் அளித்தது
“அடப் போய்யா, எங்க சின்ன அக்கா "அக்னி-1" 700 கி.மீ தொலைவு வரையும் பெரிய அக்கா "அக்னி-2" 1500-1800 கி.மீ தொலைவு வரையும் போய் தாக்குதல் நடத்த வல்லவர்கள். அத உட்டுட்டு தம்மாத்துண்டு சின்னப் புள்ள, அதுவும் வெறும் 700 கி.மீ தொலைவு போற ஏவுகணைக்குப் போயி இத்தனை பில்டப் குடுக்காதய்யா” என்று லொடுக்கு படு நக்கலாகக் கேட்டான்
“பொறு சொல்கிறேன்.” என்று கழுகு லொடுக்குவை முறைத்துப் பார்த்துக் கொண்டே பதில் அளித்தது.
“இந்தச் சுட்டிப்பெண் நீர்மூழ்கிக்கப்பல்களில் பொருத்தப்பட்டு நீருக்கடியில் இருந்து தாக்குதல் நடத்த வல்லவள். இதன் மூலம் நம்முடைய அணு ஆயுதப் பயன்பாடு அடுத்த பரிமாணத்தை எட்டியுள்ளது.”
மீண்டும் லொடுக்கு அதே நக்கலுடன், "யோவ், ஏதோ தண்ணிக்குள்ள இருந்து வந்து 700 கி.மீ போகுதுன்னு சொன்ன அத ஒத்துக்குறேன். ஆனா ஏதோ அணு ஆயுதப் பயன்பாடு, புதிய பரிமாணம் அப்புடி அப்புடின்னு சாரை உடுற, நாங்கெல்லாம் ராமராஜன் மாதிரி கலர் கலரா சட்டை போடுறத வச்சு என்ன பட்டிக்காட்டுப் பயல்-ன்னு நெனச்சுட்டியா, ஒன்னோட ரெக்கையப் புடிங்கிடுவேன்". என்று மிரட்டினான்.
கழுகு தலையில் அடித்துக் கொண்டு விளக்க ஆரம்பித்தது.
"நம்முடைய நாடு அணு ஆயுதங்களை உடைய நாடு இல்லையா?"
லொ: ஆமா, யாரு இல்லேன்னா?
கழுகு: சரி நம்மோட அணு ஆயுதங்கள் எல்லாம் எங்க இருக்கு?
லொ: SFC (Strategic Forces Command)-ன்னு சொல்லப்படுற ஒரு சிறப்புப் படைப்பிரிவு கிட்ட இருக்கு.
கழுகு: இல்ல, SFC அணு ஆயுத்ங்களை வைத்து தாக்குதல் நடத்தப் பயிற்சி பெற்றவர்கள் அவ்வளவு தான். நம்முடைய அணு ஆயுதங்கள் எங்கேயெல்லாம் பாதுகாப்பா வைக்கப்பட்டிருக்கு?
லொ: என்ன இப்படிக் கேட்டுட்ட? அது ராணுவ ரகசியம் இல்லையா?
கழுகு: நீயெல்லாம் ஒரு நிருபர்? நம்முடைய அணு ஆயுத வல்லமையை முப்பரிமாணத்திலும் நாம் பயன்படுத்துவோம் இல்லையா? அதாவது தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை வழியாகத் தாக்குதல் நடத்தும் வல்லமை நமக்கு உண்டு அல்லவா?
லொ:ஆமாம்
கழுகு:சரி இப்போது நம் நாட்டின் மீது ஒரு ஃ நாடு படையெடுக்கப் போகிறது என்று வைத்துக் கொள். அவர்கள் அணு வல்லமை படைத்த நம்முடன் மோத வேண்டுமானால் நம்மைத் தாக்கும் முன் முதலில் எதை அழிக்க விரும்புவார்கள்?
லொ: வேறென்ன நம்முடைய அணு ஆயுத்ங்களைத் தான்.
கழுகு:பரவாயில்லை உனக்கும் கொஞ்சம் கூறு இருக்கிறது.
லொ: ஆனால் நாம் தான் நம்முடைய அணு ஆயுதங்களைப் பாதுகாப்பாக ரகசியமான் இடத்தில் வைத்திருக்கிறோமே?
கழுகு: முட்டாள் என்பதை ஏனைய்யா underline செய்து காண்பிக்கிறாய். நம்முடைய அத்தனை துறைமுகங்களையும், வான்படைத்தளங்களையும் நம்மைவிட எதிரிகள் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்கள்,
கழுகு:அது மட்டுமில்லாமல் அணு ஆயுத்ங்கள் போர்க்கப்பல்களில் ஏற்றப்படும் முன்பு கடற்படைத்தளங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். எதிரிகள் செய்ய வேண்டியது ஒன்று தான். ஒரே மூச்சில் நம்முடைய கடற்படைத்தளங்கள் மீதும் கடலில் தென்படும் போர்க்கப்பல்கள் மீதும் வான்படைத்தக்குதல் நடத்தினால் அவர்களுடைய துறைமுக நகரங்கள் பாதுக்காப்பாக இருக்கும்.
அது போல கொஞ்சம் கடின முயற்சி எடுத்தால் நம்முடைய வான்படைத்தளங்கள் அனைத்தையும் நாம் எதிர்த்தாக்குதலுக்கு ஆயத்தமாகும் முன்பே அழித்துவிடலாம்.
லொ: அது எப்படி முடியும்?
கழுகு: அது ஒன்றும் அரிய செயல் அல்ல. நம்முடைய அத்தனை வான்படை மற்றும் கடற்படைத தளங்களின் அமைவிடம், பரப்பளவு எல்லாமே செயற்கைக்கோள்கள் மூலம் எல்லா நட்டுக்கும் தெரியும். (எல்லா நாட்டு தளங்களும் நம்முடைய ராணுவத்துக்கும் தெரியும் என்பது வேறு...) அதே போல போர்க்கப்பல்களின் நடமாட்டத்தையும் கண்காணிப்பது அரிய செயல் அல்ல. எனவே ஒரே தாக்குதலில் (To provide Element of Surprise) ஒரு 700 நீண்ட தொலைவு பறக்கும் F-16 அல்லது MiG-29 ரக பறவைகளை பயன்படுத்தினால் போதும். நீ அணு ஆயுதங்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு முடமாக்கப்படுவாய்.
லொ: இப்போது கொஞ்சம் புரிகிறது.
கழுகு: உன்னுடைய கணிப்பு சரி தான். போர்க்காலங்களில் அணு ஆயுதங்களைப் பாதுகாப்பாக எதிரிகளின் கண்ணில் படாமல் வைத்திருக்க மிகச்சிறந்த வழி கடலுக்கடியில் வைத்திருப்பது தான். நம்மிடம் உள்ள 20+ நீர்மூழ்கிக்கப்பல்களில் கடலுக்கடியில் வைத்துப் பாதுகாத்து இருப்பதோடு இல்லாமல் அந்த ஆயுதங்களை வைத்து நினைத்த நேரங்களில் தாக்குதல் நடத்தலாம் (To give them our own Element of Surprise)
லொ: இப்பவும் எனக்கு ஒரு சந்தேகம்.
கழுகு: என்னடா அது?
லொ:இப்பவும் நம்மோட தாக்குதலுக்கு நம்மோட நீர்மூழ்கிக்கப்பல மேல கொண்டு வரனும் இல்லையா அப்போ அவிங்க செயற்கைக்கோள வச்சு கண்டுபிடிச்சு ஆப்பு வச்சா என்ன செய்ய?
கழுகு: அதுக்குத் தான் இந்த குட்டிப்பெண் சகரிகா. நம்முடைய ஒட்டு மொத்தத் தாக்குதல் வல்லமையும் தாக்கி அழிக்கப்பட்டாலும் நம்மால் சில அணு ஆயுதங்களைப் பாதுகாப்பாகக் கடலுக்கடியில் ஒளித்து வைத்து தேவையான நேரத்தில் கடலுக்கு அடியில் இருந்தே எதிரிகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தமுடியும் . இது போரின் போக்கையே மாற்றும் ஆற்றல் கொண்டதாகும்.
லொ: இப்போ புரிகிறது சகரிகா ஏன் இந்தியப் பாதுகாப்புத்துறையின் செல்லப்பிள்ளை என்று.
சரி உலக நாடுகளின் ஏவுகணை தொடர்பான தகவலோடு அடுத்து உன்னைச் சந்திக்கிறேன் என்று கழுகு இறக்கையைத் தட்டிப் பறந்தது.
SLBM - Submarine Launched Ballistic Missile
Wednesday, April 2, 2008
Subscribe to:
Posts (Atom)